
பிரிட்டன் நாட்டில் ரிச்சர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வந்த நிலையில் தன்னுடைய போனை தன் imac லேப்டாப்பிலும் கனெக்ட் செய்து வைத்துள்ளார். இவர் தன்னுடைய போனில் imassage செயலியை பயன்படுத்தி பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் பேசி வந்துள்ளார். இவர் அந்தப் பெண்களுடன் பேசி முடித்த பிறகு அந்த உரையாடல்களை டெலிட் செய்துள்ளார். இந்த நிலையில் அவருடைய மனைவி அவருடைய லேப்டாப் மூலம் பாலியல் தொழிலாளிகளுடன் பேசிய செய்திகளை படித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் ரிச்சர்ட் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது ஐபோனில் மெசேஜ்ஜை டெலிட் செய்த பிறகும் அது லேப்டாப்பில் டெலிட் செய்யப்படாமல் இருந்தது ஆப்பிள் நிறுவனம் தனக்கு செய்த துரோகம். ஐபோனில் மெசேஜை டெலிட் செய்த பிறகும் லேப்டாப்பில் அது காட்டும் என்ற செய்தியை ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதனால் நான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், நிதி ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளேன். 20 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த என் மனைவி இப்போது பிரிந்துவிட்டார். எனவே எனக்கு அந்நிறுவனம் ரூ.52 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தன் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.