
உத்திரபிரதேசம் மாநிலத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது அந்த இரண்டு பெண்களையும் அவர்களது கணவர்கள் கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்த இரு பெண்களும் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னர் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் முதன்முதலாக நீதிமன்ற வளாகத்தில் தான் சந்தித்துள்ளனர்.
தங்களுடைய கணவன்மார்களால் ஏமாற்றப்பட்ட விரக்தியில் இருந்த இருவரும் பழகி வந்த நிலையில் பின்னர் காதலிக்க தொடங்கி ஒரு கோவிலில் வைத்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இதில் ஒரு பெண் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றும் நிலையில் மற்றொருவர் ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மேலும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.