கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பூர்ணிமா (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் மைசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அபிஷேக் என்ற 26 வயது வாலிபர் பூர்ணிமாவை சந்தித்துள்ளார்.

அப்போது முதலே வாலிபர் பூர்ணிமாவை காதலிப்பதாக கூறிய நிலையில் அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும் அபிஷேக் ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அபிஷேக் தனக்கு கிடைக்காத பூர்ணிமா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என முடிவு செய்து நேற்று முன்தினம் பூர்ணிமாவிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி ஒரு பூங்காவிற்கு அழைத்துள்ளார். அங்கு வைத்து மீண்டும் அபிஷேக் தன்னை காதலிக்குமாறு பூர்ணிமாவிடம் கூறிய நிலையில் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இதில் ஆத்திரமடைந்த அபிஷேக் பூர்ணிமாவை தான் வைத்திருந்த கத்தியால் கொடூரமாக குத்திய நிலையில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். பின்னர் அவரே ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு பூர்ணிமாவை சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் தலைமறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து நேற்று அபிஷேக்கை கைது செய்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் உச்சகட்டமாக பூர்ணிமாவை அவர் கத்தியால் குத்திய பிறகு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு தாலி கட்டினார்.

பின்னர் அவருடன் மஞ்சள் கயிறோடு செல்பி எடுத்து தன்னுடைய whatsapp ஸ்டேட்டஸில் வைத்த நிலையில் பூர்ணிமாவில் வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ் வைத்தார். மேலும் அவர் எடுத்து செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கோபத்திற்கும் ஆளாகியுள்ளது.