
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு அருகில் கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று பெண் ஒருவரின் சடலம் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உயிரிழந்த பெண் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் வர்ஷா என்பவர் என்று போலீசார் அடையாளம் கண்ட நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது விஷால் என்பவரின் மனைவி வர்ஷா. விஷாலுக்கு ஒரு பெண்ணோடு திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் மனைவி வர்ஷா அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பரோடு சேர்ந்து மனைவி வர்ஷாவை சுட்டு கொலை செய்துள்ளார் விஷால். இதனையாடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.