ஈரோடு மாவட்டத்தில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சென்று வந்தார்.

இவருக்கு ராகுல் என்ற ஒரு 21 வயது வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அந்த இளம் பெண்ணுக்கும் இவருக்கும் இடையே நாளடைவில்  நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில் அந்தப் பெண் கர்ப்பமாகவே ராகுலிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு ராகுல் கர்ப்பத்தை கலைத்து விடு அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி மருந்து கடையில் கர்ப்பத்தை கலைக்கக்கூடிய மருந்து வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த மாத்திரைகளை சாப்பிட்டு இளம் பெண் கர்ப்பத்தை கலைத்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் செங்கல்பட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி மறைமலைநகர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு ராகுலை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.