
கோவையில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் பரிசளிப்பு விழாவில் நடிகர் சதீஷ் நடிகை மிருளானி ரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசியபோது, கல்லூரி படிக்கும் மாணவர்கள் கட் அடிக்கலாம், பிட் அடிக்கலாம். ஆனால் காதலில் மட்டும் யாரும் விழுந்து விட வேண்டாம்.
இது உங்களுக்காக நன்றாக படிக்கும் காலம். அது மட்டும் நன்றாக கவனம் செலுத்துங்கள் நான் இதுவரையிலும் என் வாழ்நாளில் மதுவையோ, புகைபிடிப்பதையோ செய்ததில்லை. தொடர்ந்து உழைத்து சினிமா துறையில் முன்னேறி வருகிறேன். நான் உங்கள் முன் ஒரு முன் உதாரணமாக வந்து நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.