
கேரள மாநிலம் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது மண் சரிந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண்ணில் புதைந்த 3 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக ஒருவர் மட்டும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் போலீசார் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.