
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரெய்லி பகுதி நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ட்ரக் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பெரிதும் சேதமடைந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால் காரின் உள்ளே இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கி ஒரு குழந்தை உட்பட எட்டு பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.