விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட  நிலையில் நடிகர் விஜய் முதல் மாநாட்டினை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி கூற தெரிவித்திருந்தார். இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மேடைக்கு அருகே இருந்த சில ரசிகர்கள் திடீரென கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டனர்.

இதை சற்றும் விஜய் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக தன் பேச்சை நிறுத்திவிட்டு அமைதி அமைதி என்று கையசைத்தார். மேலும் இந்த வீடியோ போலியான வீடியோ என்பது பின் தெரியவந்தது. அதாவது மாநாட்டில் தமிழக வெற்றி கழகம் என்றும் விஜய் என்றும் தான் கோஷம் எழுப்பியுள்ளனர். இருப்பினும் அதனை எடிட் செய்து அஜித் என்று ரசிகர்கள் கோஷமிட்டதாக வைரல் ஆக்கினார். ஆனால் அது பின்னர் போலி என்று தெரிய வந்த நிலையில் மீண்டும் அந்த வீடியோவை தற்போது இணையதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.