
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வெளியாகி காண்போரை வியக்க வைக்கும். அதன்படி தண்ணீருக்கு அடியில் உள்ள ஹோட்டல் அறையில் தம்பதிகள் இருவர் தங்கி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே தண்ணீருக்கு அடியில் என்ன இருக்கும் என தெரிந்து கொள்வதில் பலருக்கும் அதிகமான ஆர்வம் இருக்கும்.
மாலத்தீவில் உள்ள ஒரு ஹோட்டலில் தாங்கள் தங்கி இருக்கும் காணொளியை காரா மற்றும் நேட் தம்பதிகள் இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். ஆடம்பர வசதிகள் நிறைந்த தங்கும் இடத்தையும் கடலுக்கு அடியில் எந்த பயமும் இல்லாமல் தங்கி இருக்கும் பொது அனுபவத்தையும் அவர்கள் இந்த வீடியோ மூலம் அனைவருக்கும் பகிர்ந்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க