திருச்செந்தூர் கடற்கரையில் பெண் தவறவிட்ட தங்க செயின் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் தினமும் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் நேற்று பலர் சுவாமி தரிசனம் செய்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரியா என்ற பெண் தான் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை கடற்கரையில் தவறவிட்டார்.

பின்னர் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் சென்று பிரியா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பாதுகாப்பு பணியாளர்கள் அரை மணி நேரம் தங்கச் செயினை தேடினர். பின்னர் தங்கச் செயினை கண்டுபிடித்து உரிய சோதனைக்கு பிறகு பிரியாவிடம் ஒப்படைத்தனர்.