
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடலில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தபோது ஐந்து பவுன் தங்கச் சங்கிலி ஒன்று திடீரென்று காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனே கடல் பாதுகாப்பு படையினர் மற்றும் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் சேர்ந்து செயினை தேடி உள்ளார்கள்.
பத்துக்கு மேற்பட்ட நபர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் தேடியுள்ளனர். அப்பொழுது ஒருவருடைய கையில் அந்த தங்க செயின் கிடைத்த காட்சி ஆனது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த ஐந்து பவுன் தங்கச் செயினை கண்டுபிடித்ததோடு அந்த பெண்ணிடமும் ஒப்படைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முருகன்
சோதிச்சு பார்த்தாலும்
திரும்ப
கிடைக்க வழி பண்ணிட்டான்உதவிய
மீனவ மக்கள்
பாராட்டப்பட வேண்டியவர்கள் pic.twitter.com/fm01ERW0zR— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) June 23, 2024