
உலகின் பெரும் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்றவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் 12வது குழந்தைக்கு தற்போது தந்தையாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரத்தில் பல பெண்களோடு தொடர்பு கொண்ட இவர் கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ஆறு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார் . தற்போது பிறந்துள்ள 12வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோ டெக்னாலஜி துறையில் இயங்கி வரும் நியூராலஜி நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் என்பவர் பெற்று எடுத்திருக்கிறார்.
இது மூன்றாவது குழந்தை. கடந்த 2021 ஆம் வருடம் இந்த தம்பதிக்கு ஸ்டிரைடர் , ஆஸுரே
என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இது தவிர பாடகி கிரிம்ஸ்ம் மஸ்கின் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவோன் சிலிஸ் பிறந்துள்ள எலான் மஸ்கின் பன்னிரண்டாவது குழந்தை இந்த வருடத்தின் தொடக்கத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு ,பாலினம் ஆகியவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.