
ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் 9 கிலோ கஞ்சா உள்பட 19 கிலோ போதைப்பொருள்களை 2018ஆம் ஆண்டு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்தின் இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா உட்பட 19 கிலோ போதைப்பொருள்களையும் எலிகள் திண்றுவிட்டதாக காவல்துறையினர் பதில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.