தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்து வருகிறது என்று கடுமையாக சாடினார். இது பற்றி அவர் கூறியதாவது, கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக அரசுதான். முல்லைப் பெரியாறு அணை மற்றும் காவிரி விவகாரத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நீட் தேர்வு பற்றி பேசும்போது முதன் முதலில் ஆட்சியில் இருந்தது திமுக தான். இதேபோன்று டங்ஸ்டன் சுரங்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவைகளிலும் திமுக அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்து வருகிறது. சமீபத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும் சமீபத்தில் கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என்று செல்வப் பெருந்தகை கூறிய நிலையில் அதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது கச்சத்தீவை தாரை வார்க்கும்போது ஆட்சியில் இருந்தது திமுக தான் என்றும் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுத்து வருகிறது என்றும் தமிழிசை பரபரப்பு குற்ற சாட்டினை முன் வைத்துள்ளார் ‌