சேலம் மாவட்டம் அய்யம்பெரும்பாம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சந்துரு (25) என்பவருக்கு புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சந்துரு இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தவறாக ஏற்பட்ட நிலையில் கடந்த 4ம் தேதி கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஜீவா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான மூன்று ஆண்டுகளில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.