
உத்திரபிரதேச மாநிலம் ஹரித்வாரில் ஐந்து வயது சிறுவனை கங்கை நீரில் மூழ்கடித்து கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அவனை கங்கை நீரில் மூழ்க செய்தால் புற்றுநோய் குணமாகும் என்ற நம்பிய பெற்றோரும் சிறுவனின் அத்தையும் ஹரித்வார் அழைத்து வந்து தண்ணீரில் மூழ்கடித்துள்ளனர்.
சிறுவனின் தந்தை தண்ணீரில் மூழ்கி சிறுவனை மூச்சு திணற வைத்து உயிரிழக்க செய்துள்ளார். இதனை தடுக்க வந்த அருகில் இருந்தவர்களையும் அவர் கடுமையாக தாக்கியுள்ளார். தற்போது பரிதவிக்க வைக்கும் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Unbelievable! How can a mother/parents drown their own child! But it happened in #Haridwar A #Delhi couple allegedly drowned their child suffering from cancer. And whole incident was captured on camera. Police have booked three persons including mother pic.twitter.com/tJJNGuBTfk
— Anupam Trivedi (@AnupamTrivedi26) January 25, 2024