
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன் பிறகு படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதால் பின்னர் இரு புள்ளிகள் வரை வால்யூமை குறைத்து வைக்குமாறு தியேட்டர்களுக்கு பட குழு அறிவுறுத்தியது. இந்நிலையில் நடிகை ஜோதிகா தற்போது கங்குவா திரைப்படம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது கங்குவா திரைப்படத்திற்கு எதிராக சிலர் வேண்டுமென்ற திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு படத்தில் 30 நிமிட காட்சிகள் சரியாக வரவில்லை என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று கூறிய ஜோதிகா, சத்தம் அதிகமாக இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார். அதே சமயத்தில் கங்குவா ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை கொடுக்கும் படம் என்றும் அந்த படம் நன்றாக இருக்கிறது என்றும் இதனை நான் ஒரு சினிமா ரசிகையாக கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே ஏராளமான விமர்சனங்கள் வருவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.