
நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்பது குறித்தான ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் அவர்களின் மகன் ஓ.பி ரவீந்திரநாத் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேனியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றிக்கு எதிராக மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பண பட்டுவாடா அதிகமாக நடைபெற்றதாக வேலூர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தேனிதொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தது. ஆனால் தேர்தலை ஒத்திவைக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை ஏற்கக் கூடாது என்று ஓ.பி ரவீந்திரநாத்த்தும் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ் எஸ் சுந்தர் முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் நேரில் ஆஜராகி ஓ.பி ரவீந்திரநாத் விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்றைய தினம் நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் அவர்கள் தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி இரண்டு வார்த்தைகளை தான் அவர் தெரிவித்தார். ஓ.பி ரவிந்திரநாத் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மேலும் ஓபி. ரவீந்திரநாத்துடைய வெற்றி என்பது செல்லாது என்று ஒரு தீர்ப்பையும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.