பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட மூன்று தம்பதிகள் கொண்ட கும்பலை கோயம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். திருடிய நகை மற்றும் பணம் மூலம் பாப்பம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கியது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தம்பதிகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதிலும் குறிப்பாக கேரளாவில் கிறிஸ்தவ ஆலயங்களில் விழாக்களின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகளை பறித்து வந்ததும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.