
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி. பேஷன்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். இவர் பயன்படுத்தப்படும் பொருட்கள் அவ்வப்போது இணையத்தி பரபரப்பாக பேசப்பட்டு வரும். அந்த வகையில் தற்போது இவர் குடிக்கும் தண்ணீர் டிரெண்ட் ஆகி உள்ளது. நீடா அம்பானி குடிப்பதுதான் உலகின் மிக விலை உயர்ந்த தண்ணீர் என்று கூறப்படுகிறது.
இந்த பாட்டிலின் மதிப்பு 49 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த நீரில் 24 காரட் தங்கத் துகள்கள் கலந்திருக்கப்படுமாம் .மெக்சிகன் வடிவமைப்பாளரான பெர்னான்டோஅல்டமிரானோ இந்த பாட்டிலை வடிவமைத்துள்ளார். மேலும் இவர் அருந்தும் நீரில் 24 கேரட் தங்க தூசியும் சேர்க்கப்பட்டிருக்கிறதாம். இதை குடிப்பதன் மூலம் ஒருவரின் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க முடியுமாம்.