
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன் என்பவர் விழுந்துவிட்டார். இதனால் சுந்தர் ஓரமாக போய் நடனமாடுங்கள் என்று கூறியுள்ளார்.
இது நாகேந்திரனுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் சுந்தரை அவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதை தடுக்க வந்த அஜய் மற்றும் வசந்தகுமார் ஆகியோரையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளியை பிடிக்க இரண்டு தனிபடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..