
சென்னையில் இன்று 22வது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த நடிகைக்கான விருதினை நடிகை சாய் பல்லவி பெற்றுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த திரைப்படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மை வாழ்க்கை வரலாறு மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.
இந்த படத்தில் இந்து ரெபேகா வர்க்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகை சாய் பல்லவி அசத்தியிருப்பார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மனைவியாக சாய்பல்லவி நடித்த நிலையில் தற்போது அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதே போன்று மெய்யழகன் திரைப்படத்திற்காக மக்களுக்கு பிடித்த நடிகர் என்ற பிரிவில் நடிகர் அரவிந்த்சாமிக்கு விருது வழங்கப்பட்டது. வேட்டையன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை துஷாரா விஜயன் வென்றார். மேலும் இதே போன்று லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் தினேஷுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.