
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால். இவர் தற்போது டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இவர் முதன்முதலாக டெவிஸ் கோப்பையில் விளையாடி தன் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் தற்போது அதே டென்னிஸ் டெவிஸ்கோப்பையின் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இறுதி முடிவை அறிவித்தார். இவர் இளம் வயதில் பல சாதனைகளை புரிந்து டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார்.
இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் போட்டி விளையாடும் நிலையில் 14 முறை பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது ரஃபேல் நாடால் ஓய்வு பெற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது ரபேல் நடால் ஓய்வு பெற்றதற்கு அவருக்கு நன்றி தெரிவித்த ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா விவகாரம் பரபரப்பான பேசப்படும் நிலையில் ஜாம்பவான் ரபேல் நடால் ஓய்வு பெற்றதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் பதிவிட்டுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.
Thank you RAFA … Tennis won’t be the same without you. @RafaelNadal pic.twitter.com/AdzwQ05i0A
— Dhanush (@dhanushkraja) November 20, 2024