நாடு முழுவதும் மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அதிக பென்சன் பெறுவதற்கு அரசு அவகாசம் வழங்கியுள்ளது. மே 3 ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்க வில்லை என்றால் இப்போது நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

ஏனெனில் மத்திய அரசிடம் இருந்து அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு மற்றொரு வாய்ப்பு தற்போது அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு ஜூன் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஓய்வூதியத்திற்காக பதிவு செய்து அதற்கு தகுதியான உறுப்பினர்களுக்கு 9.49 சதவீதமாக இருக்கும் என்றும் தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது.