
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழும் உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவர் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் எந்த அளவுக்கு அவருடைய அரசியல் தாக்கம் இருக்கும் என்று அவருடைய ரசிகர்களும் மக்களும் எதிர்பார்த்தனர். அவர் கட்சி தொடங்கிய பிறகு தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் கடந்த தேர்தலில் திமுகவுக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட திமுகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு கமல்ஹாசன் போட்டியிடவில்லை. இதன் காரணமாக கூட்டணி ஒப்பந்தத்தின்படி கமல்ஹாசன் எம்பி ஆக இருக்கிறார்.
அவர் சமீபத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழாவின்போது சினிமாவில் இருந்து எத்தனையோ பேர் அரசியலுக்கு வந்துள்ளனர். என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன் ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்று விஜயை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக கூறினார். இதன் காரணமாக கமல்ஹாசனுக்கு தற்போது தமிழக வெற்றி கழகம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இவ்வளவு நாட்கள் ஒருவர் பேசிய வார்த்தைகள் தான் மக்களுக்கு புரியவில்லை என்று பார்த்தால் தற்போது அவர் யார் எதற்காக அரசியலுக்கு வந்தார் என்பது அவருக்கே புரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நபர் யார் என்று சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது சொல்லாமலேயே மக்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும். எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார். ஊழல் கூடாரத்திற்கு எதிராக வீர வசனம் பேசிய கமல்ஹாசன் இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார். ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு பிக் பாஸ் பணிகளை செய்து கொண்டிருந்ததால் இந்த நிலை தான் ஏற்படும். எம்ஜிஆர் பெற்ற வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை. மேலும் மக்களுக்காக மக்களை நம்பி உழைத்தால் கண்டிப்பாக மக்கள் ஆதரிப்பார்கள் என்று கூறியுள்ளனர்.