
ஓ பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் சட்டமன்ற வேட்பாளராக களம் இறங்கி பலமுறை வெற்றி பெற்றார். ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும் இருந்தார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்ற தண்டனை பற்றி சிறை தண்டனைக்கு சென்றபோது இரண்டு முறை ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக இருந்தார். அவர் 2001 ஆம் ஆண்டு முதல் 26 ஆம் ஆண்டு வரை வருவாய்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 77 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் 2012 ஆம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் மீதான வழக்கில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என லஞ்ச ஒழிப்பு துறை மனு தாக்கல் செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட சிவகங்கை நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.