மும்பையில் ஓடும் ரயிலில் ஒரு இளம்பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு 19 வயது கல்லூரி மாணவி பெண்கள் பெட்டியில் ஏறிய நிலையில் ஒரு வாலிபர் திடீரென அந்த பெண்ணிடம் மோசமான பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசியுள்ளார். அந்த பெண் முதலில் பயத்துடன் இருந்தாலும் பின்னர் சமாளித்தார். இருப்பினும் அந்தப் பெண் தன்னுடைய செல்போனில் அந்த நபரின் முகத்தை வீடியோவாக பதிவு செய்த நிலையில் இதனை அந்த பெண்ணின் தோழி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

அந்த பெட்டியில் மூன்று பெண்கள் மட்டுமே இருந்த நிலையில் அடுத்த ரயில் நிலையம் வரும் வரை என்னுடைய தோழி இந்த பிரச்சனையை சந்திக்க வேண்டி இருந்தது என அந்த பெண் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதோடு மும்பை போலீசார் இந்த சம்பவத்திற்கு உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.