தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் ஓடும் ரயிலில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்தப் பெண் பயந்து போய் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது‌. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த 3-ம் தேதி ஒரு சிறுமி தான் பெற்றோருடன் ரயிலில் சென்று கொண்டிருந்த நிலையில் பாத்ரூம் சென்றுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் ரயிலின் குளியல் அறைக்குள் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் செகந்திராபாத் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில் ரயில்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.