
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில் நேற்று முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பெரும் 48 ரன்களில் சுருண்டது. விராட் கோலி உட்பட இந்திய வீரர்கள் நால்வர் அடுத்தடுத்து ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் முட்டி மீது பந்து எதிர்பாராத விதமாக விழுந்துவிட்டது.
இதனால் மைதானத்தில் கீழே விழுந்த பண்ட் வலி தாங்க முடியாமல் கத்தினார். வலியால் துடித்த அவர் தொடர்ந்து விளையாட முடியாமல் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் அவருக்கு பதிலாக துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். மேலும் ஏற்கனவே ரன்கள் குறைந்த அளவில் எடுத்து இந்திய அணி தடுமாறியது துவே வரலாற்றில் முதல் முறையாக இருக்கும்போது தற்போது பார்மில் இருக்கும் பண்ட் காயம் காரணமாக வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவான ஒன்றாக பார்க்கப்படுகிறது.