தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது ராணுவ அதிகாரிகளுடன் திடீரென சந்திப்பு நடத்தியுள்ளார். அதாவது நடிகர் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் சென்னை ஆபீஸர் அகாடமியில் நடைபெற்று வருகிறது. அந்த படப்பிடிப்பின் போது ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் விஜயை சந்திக்க வேண்டும் என்று விருப்பப்பட்டனர்.

உடனே நடிகர் விஜயும் சம்மதம் தெரிவித்து அவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார். பின்னர் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நூறுக்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் விழாவில் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் அங்கு சென்றபோது அவருக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் எச். வினோத் அவர்களும் கலந்து கொண்டார். நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் ஒரு அரசியல் கட்சி தலைவராக அல்லாமல் ஒரு நடிகராக மட்டுமே கலந்து கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆட்சி வருகிறது.