
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மோசடி போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் பதிவேடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் காவல்துறையினர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் சரவணன் (43), கற்பகமணி (43) என தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் இவர்கள் 2 பேரையும் கோட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் அவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். இதற்காக போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்ட நிலையில் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அதற்கான நகலை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.