தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ஹோம்பேலே நிறுவனத்தின் தயாரிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆனந்த் சாமி, எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சுமன் குமார் இயக்கும் நிலையில் சான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக ரகு தாத்தா திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.