
ரஷ்யாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் புவைசர் சைட்டீவ். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு 49 வயது ஆகும் நிலையில் திடீரென காலமானார். இவர் கடந்த 1996, கடந்த 2004 மற்றும் கடந்த 2008 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 75 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர்.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த போது ரஷ்ய நாட்டின் பார்லிமென்டில் அவருக்கு செனட் உறுப்பினர் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.