
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பள்ளிக்கு செல்வதற்காக இன்று 3 மாணவிகள் காத்திருந்தனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தாங்கள் குறிஞ்சிப்பாடி செல்வதால் எங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். அந்த மாணவிகளும் வாலிபர்களின் பைக்கில் ஏறிய நிலையில் ஒரே பைக்கில் 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சென்று கொண்டிருந்தபோது ஒரு பேருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டரை முந்த முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து பைக் மீது மோதியதில் ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் மற்றவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.