திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே செங்கல் நகரம் பகுதியில் சபரீஸ்வரன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக தன் மனைவியைப் பிரிந்து தன் தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

இவர் சம்பவ நாளில் வீட்டில் கதவு இல்லாத அறையில் படுத்து தூங்கிய நிலையில் மறுநாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது சபரீஸ்வரனுக்கு இதே பகுதியைச் சேர்ந்த ஒரு கணவனை பிரிந்து வாழும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் அந்த பெண்ணுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இவர் மரம் வெட்டும் தொழிலாளி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்.

இவர் முக்கூடல் பகுதிக்கு சென்றாலும் அந்த பெண்ணுடன் கள்ள உறவை தொடர்ந்துள்ளார். அந்தப் பெண் இரு வாலிபர்களுடனும் தகாத உறவில் இருந்த நிலையில் அவர் யாருக்கு சொந்தம் என்பதில் சபரீஷ்வரன் மற்றும் பாலமுருகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சம்பவ நாளிலும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் அவர்களை விலக்கிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் சபரீஷ்வரன் தூங்கிக் கொண்டிருந்தபோது பாலமுருகன் சிலருடன் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து அவரை தரம் மாறியாக வெட்டி கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தற்போது தலைமறைவாக உள்ள பாலமுருகன் மற்றும் பிற நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.