
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்ததால் சரத்குமாருக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக அவரின் கட்சிக்கு தென்காசி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் தான் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இப்போது அந்த பகுதிகளில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகி அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளில் இணைய தொடங்கியுள்ளனர்.