
ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் – கந்தஹார் நெடுஞ்சாலையில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. அதே நெடுஞ்சாலையில் நேற்று மற்றொரு விபத்தும் நடந்துள்ளது. இவ்வாறாக இரண்டு வெவ்வேறு விபத்துகளில் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 50 பேர் உயிரிழந்ததாகவும் 76 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் காபுலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.