இந்தியாவில் பல்வேறு நிதி மோசடி வழக்குகளில் குற்றச்சாட்டுகள் சந்தித்து, தற்போது லண்டனில் தலைமறைவாக வசித்து வரும் தொழிலதிபர்கள் லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா, ஒரு ஆடம்பரமான விருந்தில் கலந்து கொண்டு பாடல்களை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், இந்த இருவரும் மகிழ்ச்சியுடன் பாடல் பாடிக் கொண்டிருப்பது காணப்படுகிறது. இந்த பார்ட்டி நிகழ்ச்சி லலித் மோடியால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் 310க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். இதில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஜாம்பவான்  கிறிஸ் கெய்லும் கலந்துகொண்டு, லலித் மோடி மற்றும் மல்லையாவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மேலும், இந்த வீடியோவை “இது சர்ச்சைக்குரியது, ஆனாலும் நான் அதைத்தான் செய்கிறேன்” என்ற விளக்கத்துடன் லலித் மோடியே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது இந்தியர்களிடையே கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

“>

 

லலித் மோடி, IPL முறைகேடு வழக்கில் ஈடுபட்டவர் என கூறப்படுவதால், 2010ஆம் ஆண்டு முதல் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
விஜய் மல்லையா, ரூ.9,000 கோடிக்கு மேல் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். இவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இவர்கள் இவ்வாறு ஆடம்பர வாழ்க்கையை நடத்துவது குறித்து பொது மக்களிடையே, அரசியல் அமைப்புகளில் பரபரப்பும், சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.