
தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” என்று அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர் “அலைபாயுதே” என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து மின்னலே, பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மலையாளம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இதனையடுத்து இறுதிச்சுற்று படத்தின் மூலம் மீண்டும் இவரது திரைப்பயணம் சூடு பிடித்துள்ளது என்றே கூறலாம். நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இயக்குனராகவும் சாதித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னணி கால்பந்து வீரர் ரொனால்டோ நான் விராட் கோலியின் பெரிய ரசிகன் என்று சொல்லிய ரீல்ஸ் பார்த்து பெருமையோடு இன்ஸ்டாவில் பகிர்ந்தேன். ஆனால் இது பொய்யான AI வீடியோ என்று அனுஷ்கா சர்மா எனக்கு மெசேஜ் செய்தார். அதன் பிறகு ஐயோ ஏமாந்து விட்டேன் என்று தெரிந்தது” என்று கூறியுள்ளார்.