உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாப்பூர் பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு 15 வயது சிறுமி ஒருவர் வாங்கிய பொருளை திரும்ப கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார். ஆனால் இந்த சிறுமி அடிக்கடி இப்படி பொருள்களை வாங்குவதும் பின்னர் அதனை திரும்ப கொடுத்துவிட்டு பணம் கேட்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் சம்பவ நாளில் உரிமையாளர் கோபத்தில் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

 

இதனால் அந்த 15 வயது சிறுமி கையில் வைத்திருந்த பிளேடால் கடை உரிமையாளரின் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அருகில் இருந்தவர்கள் சிறுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்த சிறுமியை மனநல ஆலோசகத்திற்கு போலீசார் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.