இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), 2025 ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்காக தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.  முன்னதாக தர்மசாலாவில்  நடந்த பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்பதே. பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், நிலைமை மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என்றும் BCCI தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான பயண ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உதவிகளை BCCI வழங்கி வருகிறது. இதற்கிடையில் தர்மசாலாவிலிருந்து வீரர்களை பாதுகாப்பாக வந்தே பாரத் பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு வாரத்திற்குப் பிறகு IPL மீண்டும் தொடங்கினால், இந்த வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் திரும்பி விளையாடுவார்களா என்பதை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

BCCI-யின் உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள 16 போட்டிகளை நடத்தும் திட்டம், பாதுகாப்பு சூழ்நிலையின் மேம்பாட்டைப் பொறுத்தே அமையும் என்று BCCI தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து 10 IPL அணிகளின் உரிமையாளர்களுக்கும், தங்கள் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் ஒரு வாரத்திற்குள் மீண்டும் இந்தியா வரத் தயாராக இருக்க வேண்டும் என கூறி முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நிலைமை சீராக இருந்தால், BCCI புதிய கால அட்டவணையை வெளியிட்டு, மீதமுள்ள போட்டிகளை நடத்தும் வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், இந்த சீசன் முழுமையாக நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது.