ரயில் பயணம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பயணமாகும். ஆனால் ஒரு ரயிலை உற்பத்தி செய்வதற்கான செலவு எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, ஒரு ஸ்லீப்பர் கோச் தயாரிப்பதற்கு சுமார் ரூ.1.25 கோடி செலவாகும். ஏசி கோச் உற்பத்தி செய்ய ரூ.2 கோடி செலவாகும்.

இன்ஜின் தயாரிக்க ரூ.20 கோடி செலவாகும் என தெரிகிறது. அதன்படி, மொத்தமாக பார்த்தால் ஒரு முழு ரயிலை உற்பத்தி செய்ய ரூ.100 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.