
நாட்டில் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் பொருட்களை ரேஷனில் வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் உடனடியாக இ-கேஒய்சி சரி பார்ப்பை முடிக்க வேண்டும். இதனை முடிக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு மூலமாக பெரும் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும்.
அதோடு ரேஷன் கார்டிலிருந்து பெயர்களும் நீக்கப்படும். இந்நிலையில் கேஒய்சி சரிபார்ப்பை ஆன்லைனிலும் முடிக்கலாம். இதனை சரிபார்த்த பிறகு அது வெற்றிகரமாக நடந்து முடிந்ததா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வது அவர் கட்டாயம். ஏதேனும் பிரச்சனை காரணமாக சிலரின் கேஒய்சி சரிபார்ப்பு நிறைவடையாமல் போய்விடுகிறது. எனவே கவனத்துடன் அதை செய்ய வேண்டும். இதற்கு இந்த மாதம் இறுதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய கால அவகாசத்திற்குள் இ-கேஒய்சி அப்டேட்டை முடித்துக் கொள்ளுமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.