
ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான 14,000 டிக்கெட்டுகள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அதாவது இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் https://www.cricketworldcup.com/ என்ற இணையதளத்திற்கு சென்று டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். இந்திய அணியின் முதல் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா அணையுடன் மோதுகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.