செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் அனைத்து நாடாளுமன்ற மற்றும்  சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்பது  பலவீனமான வாதம் என்று தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எதிர்பார்த்தது போலவே மோடி 2.0 அரசு வேகமாக தன் ஏமாற்று குணத்தின் இரண்டு முகங்களையும் வெளிக்காட்டியிருக்கிறது. இப்படியொரு விஷயம் செய்தால் செலவு குறையுமா என்று பார்த்தால், சில உண்மைகளை ஆராய்ந்தாலே இல்லையென்று சொல்லி விடலாம் என்று  குறிப்பிட்டுள்ளார்.