
சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவு பொருள் ஆய்வாளராக இருந்து வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் சென்ற வாரம் கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்துக்கு சென்றபோது தன் விலையுயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவற விட்டு உள்ளார். இதையடுத்து தன் போனை மீட்க அணையிலிருந்து சுமார் 10 அடி ஆழத்துக்கு நீரை அவர் வெளியேற்றியிருந்தார்.
இச்செய்தி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. அப்போது வெளியேற்றப்பட்ட தண்ணீரால் எந்தவொரு பயனும் இல்லை என்று தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ராஜேஷ் விஸ்வாஸ் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.