18 ஆவது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.  மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டை இழந்து 203 ரன்கள் குவித்தது. கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்ததால் லக்னோ அணி வெற்றியை கைப்பற்றியது. ஆனால் இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட, பன்ட் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடியாமல் திணறினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் நடந்த மெகா ஏலத்தில் பன்ட் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டார், ஆனால் அவரது பேட்டிங் கொஞ்சம் கடினமாக இருந்தது.

இந்நிலையில் ரிஷப் பண்டை சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அதில், “நாங்கள் அடிக்கடி நல்ல ஃபீல்டிங் பற்றிப் பேசுவதில்லை,. ஆனால் அது கேப்டன் ரிஷப் பண்டின் சூப்பர் ஃபீல்டிங். ஃபீல்டர் இந்த பக்கமோ அந்த பக்கமோ நகர வேண்டியதில்லை, ஒரு அங்குலம் கூட. மிகச் சிறந்த பிளேஸ்மென்ட், ரிஷப் பண்டின் மிகச் சிறந்த கேப்டன்சி. அவர் ரன்கள் எடுக்காமல் இருக்கலாம், ஆனால் இந்த கேப்டன்சியுடன் அவர் தங்கத்தின் எடைக்கு மதிப்புக்கு நிகரானவர்” என்று கூறியுள்ளார்.