
டெல்லி மெட்ரோ கடந்த 23 ஆண்டுகளாக நகரத்தின் முதன்மை போக்குவரத்து வசதியாக உள்ளது. இருப்பினும் சமீப காலங்களில் மெட்ரோ ரயில் தொடர்பாக சில விடீயோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், ஒரு இளைஞர் மெட்ரோ ரயிலின் உள்ளே நின்றபடி பாடல் பாடி, நடனமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ முதலில் ரெடிட்டில் பகிரப்பட்டது. “டெல்லி மெட்ரோ ரயிலை பார்க்க சப்ஸ்கிரிப்ஷன் தேவையில்லை” என்ற நகைச்சுவையான தலைப்புடன் அது வைரலாக பரவியுள்ளது. பயணிகளால் நிரம்பிய மெட்ரோ ரயிலில், இளைஞர் திடீரென பாடலுடன் நடனமாடத் தொடங்க, சிலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மற்றவர்கள் தங்கள் மொபைலில் வீடியோ எடுக்கத் தொடங்கினர்.
You don’t need any subscription to binge watch in Delhi Metro
byu/devil_sees indelhi
“>
பலர் இளைஞரின் கட்டுப்பாடற்ற மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் பாராட்டியிருந்தாலும், சிலர் அதை மீம்களாக மாற்றி நகைச்சுவையாகப் பரப்பினர். “வார இறுதியில் பெரிய சம்பளம் கிடைப்பதைவிட, சிரிப்போடு வாழ்வதை நினைவூட்டுகிறது” எனக் குறிப்பிட்ட ஒருவர், வாழ்க்கையின் போட்டிகள் மகிழ்ச்சியை இழக்கச் செய்கின்றன என பதிவிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள், மெட்ரோ பயணங்களில் சில நேரங்களில் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.