தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் ஜோதிகாவை கடந்த 2006 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இன்றளவும் ஒரு துளி கூட குறையாத காதலோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஜோடி பலருக்கு ரோல் மாடலாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து கோலிவுட் நடிகைகளுக்கு பார்ட்டி ஒன்று வைத்துள்ளார்கள். இந்த பார்ட்டியில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், டிடி நீலகண்டன்,  ரம்யா, நடன இயக்குனர்  கலா ஆகியோர் இந்த விருந்து நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார்கள்.

இவர்களுடன் சூர்யா செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கிடையில் த்ரிஷா நேற்று காதல் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். மேலும் தலையில் பூ வைத்தபடி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதா? என்றும் சந்தேகப்பட்டு வந்தார்கள். அதன்பிறகு அவர் சூர்யா வீட்டு பார்ட்டியில் கலந்து கொண்டதால் ஒருவேளை த்ரிஷாவுக்காக சூர்யாவும், ஜோதியாகவும் விருந்து வைத்தார்களா? என்ற கேள்வியும் என தொடங்கியுள்ளது.